நம்பிக்கை மனிதனை வாழ வைக்கின்றது. நம்பிக்கையின்மை வீழ வைக்கின்றது.
நம் எல்லோருக்குள்ளும் திறமை இருக்கின்றது. அதை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பது தான் வித்தியாசப்படுகின்றது.
உன்னால் ஒரு விசயத்தைச் செய்ய முடியாது என்று நினைத்தாலும் செய்ய முடியும் என்று நினைத்தாலும் இரண்டுமே உண்மை தான்.
உன்னால் செய்ய முடியாது என்று நினைத்தால் காரணங்களைத் தேடுகிறாய்.
உன்னால் செய்ய முடியும் என்று நினைத்தால் நீ அதைப் பற்றி நேர்மறையாக சிந்திக்க ஆரம்பிக்கின்றாய். அவை நல்ல எண்ணங்களாக உருமாறும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்.
நல்ல செயல்கள் நல்ல பழக்கங்களை உருவாக்கும். நல்ல பழக்கங்கள் நல்ல ஒழுக்கத்தையும் உயர்ந்த குணத்தையும் உருவாக்குகின்றன. அவை உன் வாழ்வை உயர்த்தும்.
உன்னால் முடியும் என்று நம்பினால் உன் வாழ்வு உயரும்.
மறுமொழி இடவும்