உன்னோடு நானிருந்தால்

அன்பே

நீடுபுகழ் தேவையில்லை

வீடுமனை தேவையில்லை

பணம் பதவி தேவையில்லை

உணவுகூடத் தேவையில்லை

உன்னோடு நானிருந்தால் எனக்கு

என்று சொல்வதற்கில்லை

 

நீ

நதியைக் குடித்திடுவாய்

கடலைத் தாண்டிடுவாய்

மலையைப் பெயர்த்திடுவாய்

என்றும் சொல்வதிற்கில்லை

 

ஆனால்

உன் கனவுகள் என் கனவுகளாகும்

உன் இலட்சியங்கள் என் இலட்சியங்களாகும்

உயிர் உரமிட்டு உதிரம் நீர்பாய்ச்சி

உயர்வு உனக்கென உழைத்திடுவேன் கண்ணே

உன்னோடு நானிருந்தால்

– வ.முனீஸ்வரன்