உன் காதலின் அளவு என்ன?

கைப்பேசி என்னுடன் காதலாக பேசியது

நீ தேடுவது எல்லாம் நான் தருகிறேனே!

என் மீதான உன் காதலின் அளவு என்ன?

நீ தூங்காமல் தவிக்கும் போது

உனக்கு இங்கு துணையாக நான்தானே!

என் மீதான உன் காதலின் அளவு என்ன?

தொலைவு என்பதை இல்லை என்று காட்டி

நொடியில் எவருடனும் இணைக்கின்றேனே

என் மீதான உன் காதலின் அளவு என்ன?

என் துணையின்றி ஒருநாள் இருந்து பாரேன்

இயலுமா என்று! இப்போது சொல்

என் மீதான உன் காதலின் அளவு என்ன?

சிகரெட் பெட்டியில் நூல் கட்டி

நண்பனும் நானும் பேசிய போது

இருந்த நெருக்கம் இப்போதில்லையே!

இந்த அலைபோசி மீது எப்படி காதல் வரும்?

பதில் சொல்லாமல் விழித்த

எனக்கு விழிப்பு வந்தது

இழந்த வாழ்க்கை மட்டும்

இழந்ததாகவே தொடர்கிறது…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942