மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 03.04.2017 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையானது 04.04.2016 அன்று வெளியிடப்பட்டது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களை தரம் பிரித்து தரவரிசைப் பட்டியலை 2016 முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
தேசிய தர வரிசை நிறுவனம் இந்தாண்டு இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருந்தியல், பல்கலைக் கழகங்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என ஆறு வகைகளாகப் பிரித்து தனித்தனியே தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் கட்டிடக் கலையியல், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் பட்டியல் தயார் செய்ய போதிய விவரங்கள் கிடைக்கப் பெறாததால் அதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடவில்லை என்று மத்திய அரசின் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் தயார் செய்ய கீழ்காணும் விவரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
1.கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் அதற்குத் தேவையான வளங்கள்
2.கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் கூட்டுச் செயல் திறன்
3.கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் திறமை (வேலை வாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் தொழில் முனையும் தன்மை, வேலை வாய்ப்பு மூலம் பெறும் சம்பளம்)
4. கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்.
5. சமானியர்களை மதிப்பீடு செய்யும் செயல்முறை, இருக்கை விகித பயன்பாடுகள் போன்ற விவரங்கள்.
கல்வி நிறுவனங்கள் மேற்காணும் விவரங்களின் படி ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தர வரிசைப்பட்டியல் தயார் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றவை
பல்கலைகழகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் பிரிவு – இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுர் – 83.28 மதிப்பெண்கள்
பொறியியல் பிரிவு – இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை – 87.96 மதிப்பெண்கள்
மேலாண்மைப் பிரிவு – இந்திய மேலாண்மை நிறுவனம், அகமதாபாத் – 78.96 மதிப்பெண்கள்
மருந்தியல் பிரிவு – ஜாமியா ஹாம்தார்த், புது தில்லி – 73.64 மதிப்பெண்கள்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரிவு – மிராண்டா ஹவுஸ், புது தில்லி – 69.39 மதிப்பெண்கள்
உயர்கல்வி தரவரிசை 2017
ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள்
ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | பெயர் | மதிப்பெண் | ரேங்க் |
1 | இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை | 73.97 | 2 |
2 | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 56.50 | 13 |
3 | அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் | 54.70 | 14 |
4 | வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் | 51.36 | 22 |
5 | தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்புத்தூர் | 48.84 | 28 |
6 | தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி | 46.57 | 34 |
7 | பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 46.45 | 35 |
8 | பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | 44.29 | 45 |
9 | சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் | 43.50 | 50 |
10 | எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 43.07 | 55 |
11 | தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை | 42.48 | 60 |
12 | ஸ்ரீ இராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை | 42.46 | 61 |
13 | மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை | 41.85 | 64 |
14 | இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி | 41.73 | 67 |
15 | சத்ய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 41.30 | 72 |
16 | ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் தொழில்நுட்பக் கல்லூரி, காலவாக்கம் | 40.31 | 80 |
17 | இந்திய பயிர் வளர்ப்பு தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் | 39.15 | 87 |
18 | பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் | 39.07 | 88 |
19 | சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 38.68 | 91 |
20 | அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் | 38.59 | 92 |
பல்கலைக் கழகங்கள்
பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 24 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | பல்கலைக் கழகம் | மதிப்பெண் | ரேங்க் |
1 | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 56.50 | 6 |
2 | அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் | 54.70 | 9 |
3 | வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் | 51.36 | 14 |
4 | தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்புத்தூர் | 48.84 | 17 |
5 | பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 46.45 | 21 |
6 | பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | 44.29 | 28 |
7 | சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் | 43.50 | 32 |
8 | எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 43.07 | 34 |
9 | தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை | 42.48 | 38 |
10 | ஸ்ரீ இராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை | 42.46 | 39 |
11 | மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை | 41.85 | 41 |
12 | சத்ய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 41.30 | 44 |
13 | சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 38.68 | 55 |
14 | அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் | 38.59 | 56 |
15 | வேல் டெக் பல்கலைக்கழகம், சென்னை | 37.13 | 65 |
16 | மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை | 36.47 | 70 |
17 | காருண்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் | 36.44 | 71 |
18 | காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை | 36.04 | 77 |
19 | பெரியார் பல்கலைக்கழகம், சேலம் | 35.44 | 85 |
20 | பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி | 35.14 | 88 |
21 | கற்பகம் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் | 34.86 | 90 |
22 | காந்திகிராம் பல்கலைக்கழகம், காந்திகிராம் | 34.56 | 91 |
23 | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | 33.66 | 97 |
24 | பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 32.99 | 100 |
மேலாண்மை நிறுவனங்கள் (ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல்)
மேலாண்மை தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 6 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | மேலாண்மை நிறுவனம் | மதிப்பெண் | ரேங்க் |
1 | இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி | 55.46 | 13 |
2 | வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் | 51.83 | 17 |
3 | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 49.81 | 23 |
4 | பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் | 48.32 | 26 |
5 | ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் | 42.08 | 42 |
6 | சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் | 41.90 | 44 |
மருந்தியல் நிறுவனங்கள்
மருந்தியல் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 6 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | பெயர் | மதிப்பெண் | ரேங்க் |
1 | எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 54.28 | 9 |
2 | அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் | 50.91 | 13 |
3 | ஜெ.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி, உதகமண்டலம் | 47.13 | 17 |
4 | ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை | 45.97 | 19 |
5 | மருந்தியல் கல்லூரி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை | 38.34 | 33 |
6 | பி.எஸ்.ஜி மருந்தியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 36.21 | 46 |
பொறியியல் கல்லூரிகள்
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 21 பொறியியல் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | பொறியியல் கல்லூரி | மதிப்பெண் | ரேங்க் |
1 | இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை | 87.96 | 1 |
2 | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 63.97 | 8 |
3 | தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி | 59.44 | 11 |
4 | வேலூர் தொழில்நுட்ப கழகம், வேலூர் | 58.16 | 13 |
5 | சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் | 51.44 | 25 |
6 | ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் தொழில்நுட்பக் கல்லூரி | 50.77 | 27 |
7 | பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கழகம், கோயம்புத்தூர் | 49.49 | 33 |
8 | எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | 49.20 | 35 |
9 | தியாகராசர் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை | 47.01 | 37 |
10 | கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழகம், கோயம்புத்தூர் | 43.29 | 51 |
11 | கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை | 42.43 | 57 |
12 | வேல் டெக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | 42.31 | 58 |
13 | காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர் | 40.97 | 62 |
14 | மெப்கோ ஸிலெங் தொழில்நுட்பக் கல்லூரி, சிவகாசி | 39.21 | 73 |
15 | பி.எஸ்.என்.ஏ. தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் | 38.27 | 78 |
16 | குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் | 37.74 | 82 |
17 | ஆர்.எம்.கே தொழில்நுட்பக் கல்லூரி, காவேரிப்பேட்டை | 37.45 | 84 |
18 | பி.எஸ்.அப்துல் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை | 36.97 | 89 |
19 | சவிதா தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் | 36.88 | 91 |
20 | ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை | 36.64 | 96 |
21 | செயின்ட் ஜோசப் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை | 36.51 | 97 |
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
அறிவியல் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 36 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் | கல்லூரி | மதிப்பெண் | ரேங்க் |
1 | லயோலா கல்லூரி, சென்னை | 68.68 | 1 |
2 | பிசப் ஹுபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | 61.18 | 4 |
3 | கிருஸ்டியன் பெண்கள் கல்லூரி, சென்னை | 57.37 | 10 |
4 | பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 55.64 | 11 |
5 | சென்னை கிருஸ்டியன் கல்லூரி, சென்னை | 55.44 | 12 |
6 | அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி | 54.62 | 13 |
7 | பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோயம்புத்தூர் | 53.97 | 14 |
8 | எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை | 52.85 | 16 |
9 | கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி கோயம்புத்தூர் | 51.84 | 19 |
10 | ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் | 50.80 | 22 |
11 | ஹோலிகிராஸ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | 48.13 | 26 |
12 | பாத்திமா கல்லூரி, மதுரை | 47.95 | 27 |
13 | வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் | 45.06 | 38 |
14 | வி.எச்.என். செந்திகுமார நாடார் கல்லூரி, விருதுநகர் | 44.80 | 39 |
15 | ஏ.வி.சி. கல்லூரி, மயிலாடுதுறை | 44.29 | 43 |
16 | ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் கல்லூரி, சென்னை | 43.77 | 47 |
17 | கே.எஸ்.இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு | 43.32 | 50 |
18 | ஹோலி கிராஸ் கல்லூரி, கன்னியாகுமரி | 43.17 | 54 |
19 | எஸ்.பி.கே கல்லூரி, அருப்புக்கோட்டை | 42.57 | 56 |
20 | கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரட்டாடிபாளையம் | 42.39 | 57 |
21 | ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் சாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரி, சென்னை | 42.07 | 59 |
22 | மீனாட்சி பெண்கள் கல்லூரி, சென்னை | 42.07 | 59 |
23 | ஸ்ரீமதி டி.என்.பகத் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி, காஞ்சிபுரம் | 41.91 | 62 |
24 | கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு | 41.90 | 63 |
25 | நிர்மலா பெண்கள் கல்லூரி, கோயம்புத்தூர் | 41.73 | 65 |
26 | இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 41.69 | 66 |
27 | மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் | 41.33 | 67 |
28 | ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 40.89 | 68 |
29 | எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர் | 40.29 | 69 |
30 | இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 38.65 | 75 |
31 | கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் | 38.60 | 76 |
32 | எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் | 38.03 | 82 |
33 | முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் | 37.46 | 86 |
34 | சேக்ரெட் ஹார்ட் கல்லூரி, திருப்பத்தூர் | 35.43 | 95 |
இந்திய அளவில் தமிழக கல்வி நிறுவனங்கள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்