உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

உங்கள் தேடலை நிறுத்துகிறபோது

உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

பல்பை கண்டுபிடித்த எடிசனுக்கு

இருளைத் தவிர

வெற்றி வேறொன்றும் இல்லை

உயர்ந்த மலை உச்சிக்கு சென்று

சாதனை படைக்கலாம்

ஆனால் அங்கு குடியிருக்க முடியாது

இறங்கி வந்தால்தான் உலகம் உங்களைக் கொண்டாடும்

உயர்வு என்பது முடியும் இடமல்ல

அது தொடரும் இடம்

தாழ்வு என்பது இருப்பிடம் அல்ல

அது புறப்படும் பிறப்பிடம்

வளர்ச்சியின் முதற்படி

ஒரு சிறந்த நெகிழ்வுத்தன்மை

இயற்கைக்கு ஆக்கம் கொடுத்து அழகு சேர்க்கும்

இரண்டு வாழ்வியல் சிறகுகள் உயர்வு தாழ்வு

பறவைகளின் இரு சிறகுகள் தான்

அதன் வாழ்வின் உட்சபட்ச‌ ஆயுதம்

சமவெளிகளால் தான்

மலைகளை மனம் மயங்கி ரசிக்கிறோம்

அருவிகளின் தாயகம் அது

மலை உச்சியில் நின்று பார்க்கிறபோது

சமவெளிகள் சாதனைகளாகவே தெரிகின்றன

வளர்ந்து உயர்ந்து தேய்ந்து

மறைந்து பிறந்தால்தானே நிலாவுக்கு அழகு

வளைந்து நெளிந்து

ஏறி இறங்கி ஓடினால்தானே

நதி கடலை அடையமுடியும்

மேலிருந்து பொழிந்தால்தானே

மழைக்கு அழகு

துளிர்விட்டு வளர்ந்தால்தானே

இயற்கைக்கு அழகு

தூரத்தில் இருந்தால்தானே

துன்பத்திற்கு அழகு

அருகில் இருந்தால்தானே

அன்பிற்கு அழகு

மாணவனாக இருந்தால்தானே

ஆசிரியராக உயர முடியும்.

உலகத்தின் தலைசிறந்த புத்தகங்கள்

பரந்து பார்பட்ட தேடலில் விளைந்தவைதான்

தொன்மையான தொல்பொருள் சான்றுகள்

தோண்டுதலில் கிடைத்தவைதான்

பூச்சிகளால்தான் புதுப்புது

ஆடைகளை அணிகிறோம்

கோயில் இல்லாத ஊரும் இல்லை

கோபம் இல்லாத மனிதனும் இல்லை

பல தெய்வங்கள் கோபத்தின்

அடையாளமாக சித்திகரிக்கப்படுகின்றன

உயர்வு தாழ்வு என்ற கவிதையை படைப்பதற்குகூட

பல வார்த்தைகளும் பல பூர்த்திகளும் தேவைப்படுகின்றன

உயர்வு தாழ்வு எவ்வளவு உன்னதமானது என்று

இசைக்கலைஞனுக்கு தெரியும்

புகைப்பட கலைஞன் தான் எவ்வளவு அழுக்காக இருந்தாலும்

புகைப்படத்தின் புதுமையை விரும்புவான்

உயர்வு தாழ்வு உள்ளத்தில் இருந்து பிறக்கும்

இரண்டு வாழ்வியல் சிறகுகள்

இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால்

வானில் சிறகடிக்கலாம்

உலகை வல‌ம் வரலாம்

உன் சிறகுகளும் கவிஞனாகும்

அந்த சிறகுக் கவிஞன் கவிதை எழுதுவான்- ஆனால்

நீ ஒரு சிறகை மட்டும் பயன்படுத்த நினைத்தால்

பயணம் பாதியில் தடைபட்டுப் போகும்

உங்கள் தேடலை நிறுத்துகிறபோது

உயர்வு தாழ்வு உண்ணப்படுகிறது

ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.