உழைப்பைக் கொடு
வாழ்வில் உயர்வைத் தொடு!
எண்ணம் மட்டும் போதாது
கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தால்
கற்பனையில் தானே வாழ முடியும்
நிற்காமல் ஓடினால் தானே
ஆறு கூடப் பெருங்கடலைக் காண முடியும்!
பாதைகள் இல்லையென வருந்தாதே
நீ ஓடினால்
தானே உருவாகும் பல பாதைகள்
குளம் போல நின்று விடாமல்
பாயும் ஆற்றைப் போல ஓடு
வெற்றிப் பெருங்கடலை முத்தமிட!
எல்லோரும் செல்லும் பாதையில் சென்றால்
எல்லோரும் அடையும் இடத்தை தானே அடைய முடியும்
திட்டமிட்ட பாதையில் சென்றால் தானே
விண்கலம் கூட சரியான இலக்கை அடையும்
நீ சாதிக்க நினைத்ததை அடைய திட்டமிடு
திட்டமிட்ட பாதையில் பயணித்திடு
உழைப்பைக் கொடு உயர்வைத் தொடு!
இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்
கைபேசி: 8903308535
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!