உங்கள்
கண்களுக்குள்ளிருக்கும்
கவலைகளை
சிலுவைக்கு முன்னால்
இறக்கி வைத்துவிடுங்கள்!
அறையப்பட்டவன்
சிலுவைகளை
நீங்கள் சுமப்பதை
விரும்பவில்லை!
ஆணி அடித்த
வலிகளை
உங்களுக்குள்
உணரப்படுவதிலிருந்து
விடுவிக்கச் செய்யும்
சாவிகளைத்தான்
தன் உள்ளங்கையில்
ரத்தம்சிந்த
பிடித்திருக்கிறான்!
பிரார்த்தனைக்குப் பின்
திறக்கப்படும் விழிகளில்
உயிர்த்தெழுதல்
பிதாவிற்கு மட்டுமல்ல
உங்கள்
சந்தோசங்களுக்கும் நிகழும்!
சிதவி.பாலசுப்ரமணி
கைபேசி: 7448705850
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!