அம்மா அப்பா அ சொல்லே
ஆட்டுக் குட்டி ஆ சொல்லே
இந்தா இந்தா இ சொல்லே
ஈயை ஓட்டி ஈ சொல்லே
உரலில் உமிபார் உ சொல்லே
ஊஞ்சல் ஆடுநீ ஊ சொல்லே
எருமை எங்கே எ சொல்லே
ஏணி ஏற்றம் ஏ சொல்லே
ஐந்தே விரல்கள் ஐ சொல்லே
ஒன்றே தலையும் ஒ சொல்லே
ஓடு ஓணான் ஓ சொல்லே
ஒளவைப் பாட்டி ஒள சொல்லே
அறிவாய் உயிர் எழுத்து இவையாமே