ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல்!

ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல்
ஒன்றாய் உலகத்தில் வாழ்ந்திடுவோம்!

நன்மை குணமென்றும் கொண்டிருந்தால் நன்று
பின்னை வருபவரும் போற்றுவரே!

நாட்டு நலனே மனதில் நிலைத்து விட்டால்
ஓட்டம் பிடித்திடும் வேற்றுமைதான்!

பாரத நாட்டைநாம் வாழ்த்திடுவோம்! தாயவள்
பாதக் கமலத்தில் வீழ்ந்திடுவோம்!

வாழ்க வளர்கவே நம்தேசம்!
ஒற்றுமை வாழ்வினில் நம்புகழ் வான்பேசும்!!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்