உருளைகிழங்கு மசாலா வறுவல் செய்வது எப்படி?

உருளைகிழங்கு மசாலா வறுவல் அருமையான தொட்டுக்கறி ஆகும். இது மசாலா சுவைப் பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு இதனைத் தொட்டுக் கறியாக கொடுத்தும் அனுப்பலாம்.

லெமன் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் உள்ளிட்ட எல்லா சாத வகைகளுக்கும் இது ஏற்றது. இனி சுவையான உருளைகிழங்கு மசாலா வறுவல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3 எண்ணம் (தோராயமாக 1/2 கிலோ)

உப்பு – தேவையான அளவு

மசாலா தயார் செய்ய

தக்காளி – 1 எண்ணம் (பெரியது)

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கினை முக்கால் பாகத்திற்கும் சற்று அதிகமாக வேக வைத்துக் கொள்ளவும்.

அதாவது உருளைக்கிழங்கின் மையப்பகுதி வெந்து இருக்க வேண்டும். அதே சமயம் வெளிப்பகுதி குழைய வெந்து விடக் கூடாது.

வேக வைத்த உருளைக்கிழங்கு
வேக வைத்த உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கினை சரியான பக்குவத்தில் வேக வைத்துக் கொண்டால் இதனுடைய சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.

வேக வைத்த உருளைக்கிழங்கினை தோல் உரித்து சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கினை துண்டுகளாக்கியதும்

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினைத் தோல் உரித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக்கிக் கொள்ளவும்.

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

பின்னர் அதில் நறுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பூண்டினைச் சேர்த்ததும்
பூண்டினைச் சேர்த்ததும்

அதனுடன் மிளகாய் வற்றல் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மசாலா தயார் செய்ய தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது

அதனுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கினைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.

மசாலா விழுதினைச் சேர்த்ததும்
மசாலா விழுதினைச் சேர்த்ததும்
உருளைக்கிழங்கினைச் சேர்த்ததும்

உருளைக்கிழங்கு சுருள வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

வதக்கும் போது
இறக்கத் தயார்நிலையில்
அடுப்பிலிருந்து இறக்கத் தயார்நிலையில்

சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தாளிதம் செய்யும்போது கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்து, பருப்புக்கள் சிவந்ததும் மசாலா விழுதினைச் சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் உருளைக்கிழங்கினை வேக வைக்கும்போதே கிழங்கிற்கு தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கலாம். பின்னர் மசாலாவிற்குத் தேவையான உப்பினை மட்டும் சேர்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.