உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு புட்டு என்பது உருளைக்கிழங்கினைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகைக் கூட்டு ஆகும்.

உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு வகையினை செய்து முடிக்க குறைந்த நேரம் போதும்.

இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – ¼ கிலோ கிராம்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

 

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

சின்ன வெங்காயம் – 3 எண்ணம்

நல்ல எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

 

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

அவித்த உருளைக் கிழங்குகள்
அவித்த உருளைக் கிழங்குகள்

 

தேங்காயை துருவலாக துருவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலை தண்ணீரில் அலசி உருவி வைத்துக் கொள்ளவும்.

தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்குகளை மசித்த பின்பு
உருளைக் கிழங்குகளை மசித்த பின்பு

 

வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சதுரங்களாக வெட்டிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிக்கும் போது
தாளிக்கும் போது

 

கடுகு வெடித்தவுடன் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

சுவையான உருளைக்கிழங்கு புட்டு
சுவையான உருளைக்கிழங்கு புட்டு

 

இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இதனை ரசித்து சாப்பிடுவர்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் பட்டை வத்தல் சேர்த்து இதனை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு இஞ்சித் துருலை தாளிக்கும் போது சேர்த்து இப்புட்டினைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.