உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 250 கிராம்

பூண்டு – 3 பல்;

வற்றல்தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லிதூள் – 1 தேக்கரண்டி

கரம்மசாலா – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

மல்லி இலை – சிறிதளவு

இஞ்சி – சிறிதளவு

வெங்காயம் – தாளிக்க

 

செய்முறை:-

¼ கிலோ உருளைக்கிழங்கை முக்கால் பதமாக வேக வைத்து உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வற்றல் தூள் 1 தேக்கரண்டி, உப்புத்தூள், மஞ்சள் கலந்து சிறிது நேரம் வைக்கவும்.

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மூன்று துண்டுகளைப் போட்டு சிவந்ததும் திருப்பிப்போட்டு ரோஸ்ட் செய்து எடுக்கவும். அல்லது

மேலே கூறியபடி ¼ கிலோ உருளைக்கிழங்கை முக்கால் பதமாக வேக வைத்து வட்டமாக நறுக்கி எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வற்றல் தூள் 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்புத்தூள், மஞ்சள் சேர்த்து கிழங்குடன் விரவி வைக்கவும்.

வாணலியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், 10 கருவேப்பிலை போட்டு வதக்கி சிறிது இஞ்சி, பூண்டு 3 பல் அரைத்து சேர்த்து சிறிது தண்ணீர் விட்ட வாசம் வரும் வரை கிளறி உருளைக்கிழங்கையும் போட்டு சிவக்க சிறு தணலில் வதக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.