உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு வறுவல் புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ். இதனை எளிய வகையில் சுவையாகச் செய்யலாம்.

உருளைக்கிழங்கு பெரும்பாலோருக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருள். இம்முறையில் செய்தால் எல்லோரும் விரும்பி உண்பர்.

உருளைக்கிழங்கின் தோலில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோலுடனே இதனை சமைப்பது நன்மைகளை உண்டாக்கும்.
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ கிராம்

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 1/4 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

உருளைக்கிழங்கினை நன்கு தண்ணீரில் மூழ்க வைத்து சுத்தமாக அலசிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

அலசிய உருளைக்கிழங்கினை சற்று பெரிய சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

சதுரமாக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள்
சதுரமாக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள்

 

தண்ணீரில் சதுரமாக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள்
தண்ணீரில் சதுரமாக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள்

 

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கினைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.

 

உருளைக்கிழங்கினைச் சேர்க்கும் போது
உருளைக்கிழங்கினைச் சேர்க்கும் போது

 

பின்னர் அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, உப்பு சேர்த்து ஒருசேர கிளறவும்.

 

மசாலாப் பொடி வகைகளைச் சேர்த்ததும்
மசாலாப் பொடி வகைகளைச் சேர்த்ததும்

 

அடுப்பினை சிம்மிற்கும் சற்றுகூட வைக்கவும்.

வாணலியை மூடி போட்டு மூடி விடவும்.

வாணலியின் மூடியை அவ்வப்போது திறந்து உருளைக்கிழங்கினை கிளறி விடவும்.

 

உருளைக்கிழங்கு வேகும் போது
உருளைக்கிழங்கு வேகும் போது

 

உருளைக்கிழங்கு வெந்து மொறு மொறுவென வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

இறக்கத் தயார்நிலையில்
இறக்கத் தயார்நிலையில்

 

சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

 

உருளைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு வறுவல்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதில் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி சேர்த்து வறுவல் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் வறுவல் இறக்கும் போது பொடியாக நறுக்கிய மல்லி இலையைச் சேர்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.