தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் தூள் : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும். வட்ட வடிவமாக செதிக்கிக் கொள்ளவும். பின் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி வெள்ளைத் துணி மீது ஒவ்வொன்றாக பரப்ப வேண்டும். அப்போழுது உருளைக் கிழங்கில் உள்ள ஈரப்பசையை துணி உறிந்து விடும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடேறிய பின் எண்ணெயை ஊற்றி வட்ட வடிவமாக உள்ள உருளைக்கிழங்கை போட்டு பொன் நிறம் சிவந்தவுடன் அரிகரண்டியால் அரித்து எடுக்கவும். சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.
ஒரு தட்டில் வைத்து மிளகாய்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கின் மீது தூவி பின்னர் காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
திறந்த வைத்தால் மொரு மொருப்பு இராது. மாலைப் பொழுதில் தீனியாகவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
மறுமொழி இடவும்