பச்சிளம் குழந்தை

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

 

கருவாக நிலைகொண்ட கதை சொல்லவா

கற்பூரம் மணம் கொண்டு காற்றோடு கலந்திங்கு

கண்ணிமைக்குள் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா

 

கரும்பென்பதா இல்லை கனி என்பதா

கற்கண்டின் சுவை கொண்ட அமுதென்பதா

நறுந்தேனைச் சுரக்கின்ற ஊற்றென்பதா

நன்றில்லா வார்த்தைகள் புறம் நீக்கி

நலம் காக்க பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா

 

சிறகின்றி நீ பறந்த நிலை சொல்லவா

சிற்பம் போல் உருவான கதை சொல்லவா

விறகின்றி நெருப்பான விதம் சொல்லவா

விளையாடும் தமிழாலே விண்தாண்டி நிலைகொண்டு

வெறும் தாளில் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனைஈன்று

உறவென்பதா இல்லை உயிர் என்பதா

 

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942