சிங்கப் பெண்ணே சிங்காரப் பெண்ணே
சிந்திக்கத் தவறியதேன்? சிரமங்களைச்
சிதைக்கப் பிறந்தவள் நீ! சிகரங்களைச்
சின்ன முயற்சியால் தொட்டு விடுவாய்!
சிறுதேர்வைக் கண்டு அஞ்சுவதேனம்மா?
தற்கொலை எண்ணம் இனியும் வேண்டாமே!
தன்னம்பிக்கைக் கதவை திற தெய்வமே!
தகுதியை வளர்த்திடம்மா தன்னாலே வளர்ந்திடம்மா!
தடம்மாறாதே தமிழ்ப் பெண்ணே!
பட்டங்கள் மட்டும் வாழ்வல்ல பெண்ணே!
திட்டங்கள் உன்வாழ்வை உயர்த்தும்
முட்டுக் கட்டைகளை முயற்சிகளாக்கு பெண்ணே!
உயிரை விடாதே தைரியப் பெண்ணே!
உனக்காக உதவ உறவுகள் உண்டு!
உன்னத பிறப்பே உடைந்து விடாதே!
உலகமே உன் கையில்!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!