உலகின் பசுமையான நாடுக‌ள் – 2018

உலகின் பசுமையான நாடுக‌ள் – 2018 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து இதில் முதலிடத்தில் உள்ளது.

180 நாடுகளில் சுற்றுசூழல் சுகாதாரம் மற்றும் சூழல்மண்டலத்தின் வளம் உள்ளடக்கிய 10 வகைகளில் 24 செயல்திறன் குறிகாட்டல்களை மதிப்பீடு செய்து சுற்றுச்சூழல் செயல்திறன் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் 2015-ஆம்ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகள், பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் கொள்கை இலக்குகளை நாடுகள் எவ்வாறு செயல்படுத்தியுள்ளன என்பதை அறிந்துகொள்வதே இதனுடைய நோக்கமாகும்.

உலகின் பசுமையான நாடுக‌ள் பற்றி சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியல் தயார் செய்ய கீழ்காணும் 10 வகைகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

1. காற்றின் தன்மை

2. தண்ணீர் மற்றும் சுகாதாரம்

3. கன உலோகங்கள்

4. பல்லுயிர் மற்றும் வாழிடம்

5. காடுகள்

6. மீன்வளம்

7. காலநிலை மற்றும் ஆற்றல் வளங்கள்

8. காற்று மாசுபாடு

9. நீர்வள ஆதாரங்கள்

10. வேளாண்மை

சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியல் 2018 – முக்கிய அம்சங்கள்

இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து 87.42 சுற்றுசூழல் செயல்திறன் குறியீட்டு எண்ணினைப் பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ் (83.95), டென்மார்க் (81.60), மால்டா(80.9), ஸ்வீடன்(80.51) ஆகிய நாடுகள் இப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளன.

இப்பட்டியலில் நேபாளம்(31.44), இந்தியா(30.57), டெம் குடியரசு காங்கோ (30.41), வங்காளதேசம்(29.56), புருண்டி(27.43) ஆகியவை கடைசி ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

இன்றைக்கு காற்றின் தரமானது உயிரினங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. காற்று மாசுபாடு நகர்ப்புற தொழில்மயமான இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கடுமையாக உள்ளது.

2014-ல் வைக்கப்பட்ட கடல் மற்றும் நிலவாழிடங்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச இலக்குகள் தற்போது தாண்டப்பட்டுள்ளன.

60 சதவீத நாடுகளில் கார்பன்-டை-ஆக்ஸைடின் தீவிரம் குறைந்துள்ளது. 85 முதல் 90 சதவீத நாடுகள் மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கருப்பு கார்பன் ஆகியவற்றின் தீவிரம் குறைத்துள்ளது.

உலகின் பசுமையான நாடுக‌ள் பட்டியல்

வ. எண் நாட்டின் பெயர் சுற்றுச்சூழல் செயல்திறன் மதிப்பீட்டு எண்
1 சுவிட்சர்லாந்து 87.42
2 பிரான்ஸ் 83.95
3 டென்மார்க் 81.60
4  மால்டா 80.90
5 ஸ்வீடன் 80.51
6 இங்கிலாந்து 79.89
7 லக்சம்பெர்க் 79.12
8 ஆஸ்திரியா 78.97
9 இர்லாந்து 78.77
10 பின்லாந்து 78.64
11 ஐஸ்லாந்து 78.57
12 ஸ்பெயின் 78.39
13 ஜெர்மனி 78.37
14 நார்வே 77.49
15 பெல்ஜியம் 77.38
16 இத்தாலி 76.96
17 நியூஸ்லாந்து 75.96
18 நெதர்லாந்து 75.46
19 இஸ்ரேல் 75.01
20 ஜப்பான் 74.69
21 ஆஸ்திரேலியா 74.12
22 கிரீஸ் 73.60
23 தைவான் 72.84
24 சைப்ரஸ் 72.60
25 கனடா 72.18
26 போர்ச்சுக்கல் 71.91
27 ஐக்கிய அமெரிக்கா 71.19
28 ஸ்லோவாகியா 70.60
29 லிதுவேனியா 69.33
30 கோஸ்டா ரிக்கா 67.85
31 பல்கேரியா 67.85
32 கத்தார் 67.80
33 செக் குடியரசு 67.78
34 ஸ்லோவேனியா 67.57
35 டிரினிடாட் மற்றும் டொபாகோ 67.36
36 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனேடின்ஸ் 66.48
37 லாட்வியா 66.12
38 துர்க்மெனிஸ்தான் 66.10
39 செஷல்ஸ் 66.02
40 அல்பெனியா 65.46
41 குரேசியா 65.45
42 கொலம்பியா 65.22
43 ஹங்கேரி 65.01
44 பெலாரஸ் 64.98
45 ருமேனியா 64.78
46 டொமினிக்கன் குடியரசு 64.71
47 உருகுவே 64.65
48 எஸ்டோனியா 64.31
49 சிங்கப்பூர் 64.23
50 போலந்து 64.11
51 வெனிசுலா 63.89
52 ருஷ்யா 63.79
53 புருனே 63.57
54 மொராக்கோ 63.47
55 கியூபா 63.42
56 பனாமா 62.71
57 டோங்கா 62.49
58 துனிசியா 62.35
59 அஜர்பைஜான் 62.33
60 தென்கொரியா 62.30
61 குவைத் 62.28
62 ஜோர்டான் 62.20
63 ஆர்மீனியா 62.07
64 பெரு 61.92
65 மொண்டெனேகுரோ 61.33
66 எகிப்து 61.21
67 லெபனான் 61.08
68 மாசிடோனியா 61.06
69 பிரேசில் 60.70
70 இலங்கை 60.61
71 எக்குவடோரியல் கினி 60.40
72 மெக்ஸிகோ 59.69
73 டொமினிகா 59.38
74 அர்ஜென்டினா 59.30
75 மலேசியா 59.22
76 ஆன்டிகுவா மற்றும் பார்புடா 59.18
77 ஐக்கிய அரபு நாடுகள் 58.90
78 ஜமைக்கா 58.58
79 நமிபியா 58.46
80 ஈரான் 58.16
81 பெலிஸ் 57.79
82 பிலிபைன்ஸ் 57.65
83 மங்கோலியா 57.51
84 செர்பியா 57.49
85 சிலி 57.49
86 சௌதி அரேபியா 57.47
87 ஈகுவடார் 57.42
88 அல்ஜீரியா 57.18
89 கேபோ வெர்டே 56.94
90 மொரீஸியஸ் 56.63
91 செயிண்ட் லூசியா 56.18
92 பொலிவியா 55.98
93 பார்படாஸ் 55.76
94 ஜார்ஜியா 55.69
95 கிரிபடி 55.26
96 பகரைன் 55.15
97 நிகரகுவா 55.04
98 பஹாமாஸ் 54.99
99 கிர்கிஸ்தான் 54.86
100 நைஜிரியா 54.76
101 கஜகஸ்தான் 54.56
102 சமோவா 54.50
103 சூரினாம் 54.20
104 சான்டோம் மற்றும் பிரின்சிப்பி 54.01
105 பராகுவே 53.93
106 எல் சல்வடோர் 53.91
107 பிஜி 53.09
108 துருக்கி 52.96
109 உக்ரைன் 52.87
110 குவாத்தமாலா 52.33
111 மாலத்தீவுகள் 52.14
112 மால்டோவா 51.97
113 போஸ்ட்வானா 51.70
114 ஹோண்டுராஸ் 51.51
115 சூடான் 51.49
116 ஓமன் 51.32
117 ஜாம்பியா 50.97
118 கிரெனடா 50.93
119 தான்சானியா 50.83
120 சீனா 50.47
121 தாய்லாந்து 49.88
122 மைக்ரோனேஷியா 49.80
123 லிபியா 49.79
124 கானா 49.66
125 கிழக்கு திமோர் 49.54
126 செனகல் 49.52
127 மலாவி 49.21
128 கயானா 47.93
129 தஜகிஸ்தான் 47.85
130 கென்யா 47.25
131 பூடான் 47.22
132 வியட்நாம் 46.96
133 இந்தோனேசியா 46.92
134 கினியா 46.62
135 மொசாம்பிக் 46.37
136 உஸ்பெகிஸ்தான் 45.88
137 சாட் 45.34
138 மியான்மார் 45.32
139 கோட் டி ஐவோரி 45.25
140 காபோன் 45.05
141 எத்தோபியா 44.78
142 தென்னாப்பிரிக்கா 44.73
143 கினி-பிஸ்ஸாவ் 44.67
144 வனுவாட்டு 44.55
145 உகாண்டா 44.28
146 கோமரோஸ் 44.24
147 மாலி 43.71
148 ருவாண்டா 43.68
149 ஜிம்பாவே 43.41
150 கம்போடியா 43.23
151 சாலமன் தீவு 43.22
152 ஈராக் 43.20
153 லாவோஸ் 42.94
154 புர்கினா பாசோ 42.83
155 சியரா லியான் 42.54
156 காம்பியா 42.42
157 காங்கோ குடியரசு 42.39
158 போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா 41.84
159 டோகோ 41.78
160 லைபீரியா 41.62
161 கேமரூன் 40.81
162 ஸ்வாசிலாந்து 40.32
163 ஜிபூட்டி 40.04
164 பாப்பு நியூ கினிவா 39.35
165 எரித்திரியா 39.34
166 மவுரித்தேனியா 39.24
167 பெனின் 38.17
168 ஆப்கானிஸ்தான் 37.74
169 பாகிஸ்தான் 37.50
170 அங்கோலா 37.44
171 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 36.42
172 நைஜர் 35.74
173 லெசோதோ 33.78
174 ஹெய்தி 33.74
175 மடகாஸ்கர் 33.73
176 நேபாளம் 31.44
177 இந்தியா 30.57
178 டெம் குடியரசு காங்கோ 30.41
179 வங்காளதேசம் 29.56
180 புருண்டி 27.43

உலகின் பசுமையான நாடுகள் 2019 பட்டியலிலாவது இந்தியா முன்னேறுகின்றதா எனப் பார்ப்போம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.