எண்ணமெல்லாம் எதிராசா நீரேயாக
என்னுள்ளே கலந்துள்ளாய் எல்லாமாக
அன்னையாய் அத்தனாய் முற்றுமாக
உன்னை விட்டு அகலாதென்னை கொள்க!
பலகாலம் மறந்தேனே உன்னை நானும்
உளமார பூசிப்பேன இனி எந்நாளும்
கலங்காத மனத்தையே எனக்குத் தாரும்
இளையாழ்வார் மறவேனே இனி எக்காலம்!
உலகுய்யத் தமிழ் மண்ணில் உதித்தாய் போலும்
நிலவுலகு மறவாது நீர்செய்த பேருபகாரம்
தாள்தொழ மறவேனே உம்மை எப்போதும்
நாளினிக்கும் எதிராசா நின்னருளே போதும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com