உலகை உனதாக்கு! – கவிதை

உயிர் கழியும் நிச்சயம்

உடல் அழியும் நிச்சயம்

உண்மை கழியாது

உறவும் அழியாது!

உயிரற்ற பொருளுக்காய்

உலவும் மனிதா!

உதாசீனப்படுத்தாதே

உலக உயிர்களை

உன் உறவுகளை!

உண்மையை உரமாக்கு நாவில்

உலகை உனதாக்கு வாழ்வில்!

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்