பெண்கள் உலகை
உயர்த்த வந்த கைகள்
நாணிக்கோணி நடைபயின்று
நாலுபேரு பார்க்க மறைந்து
நட்ட நடு வீட்டுக்குள்ள குத்த வச்சு
காலம் தள்ளும் பெண்கள் இங்கு
இல்லையென்று சொல்லிடனும்
பெண்கள் உலகை
உயர்த்த வந்த கைகள்
வேடிக்கையாய்க் கதைகள் பேசி
விதி வலியது என்று நம்பி
ஆடினாலும் பாடினாலும்
அடுப்பங்கரைக்குள்ளிருந்து
வாடி நின்று காலம் தள்ளும்
பெண்களிங்கு இல்லையென்று
சத்தமாக சொல்லிடனும்
பெண்கள் உலகை
உயர்த்த வந்த கைகள்
காடு மேடு திரிந்தலைந்து
கட்டியவன் பின்னால் சென்று
கண்ணீரைததான் சொந்தமாக்கி
வாழும் பெண்கள் இல்லையென்று
சத்தமாக சொல்லிடனும்
பெண்கள் உலகை
உயர்த்த வந்த கைகள்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!