உலக புத்தக நாள் – ஒரு பார்வை

உலக புத்தக நாள்

உலக புத்தக நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆங்கில இலக்கியம் மற்றும் நாடகத்தின் பேராளுமையான ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலரைப் போற்றும் விதமாக, ஏப்ரல் 23-ம் நாளை உலகநாடுகள் உலக புத்தக நாளாகக் கொண்டாடுகின்றன.

புத்தங்கள்தான் ஒரு நாட்டின் செல்வங்கள் என்றால் அது மிகையாகாது.

ஓலைச்சுவடிக்குள் இருந்த தமிழ் மொழியைப் பாதுகாத்து, நம் தலைமுறைக்குக் கொடுத்த பெருமைக்குரியவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் என்பது உலகம் அறிந்த செய்தி.

போராட்ட குணத்தையும், இரக்க‌ குணத்தையும் மனிதருக்குள் விதைக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு.

நமது தாய்த் திருநாடு இந்தியாவின் குடியரசு தலைவராக விளங்கிய மாமனிதர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், வாழ்க்கையே மாற்றி அமைக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

அவர் வாசித்த புத்தங்களில் நேசித்த புத்தங்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தங்கள் இதோ உங்கள் பார்வைக்கு

1. Light From Many Lamps – Lillian Watson

2. Man, The Unknown – Carrel Alexis

3. Thirukkural – Thiruvalluvar

மேற்கூறிய மூன்று புத்தகங்களையும் எப்பொழுதும் தன்னுடனே வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

Light From Many Lamps என்ற ஆங்கிலப் புத்தகத்தை தமிழாக்கம் செய்து கண்ணதாசன் பதிப்பகத்தார் வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் பெயர் விளக்குகள் பல தந்த ஒளி.

காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (Dass Capital) என்ற புத்தகம்தான் தொழிலாளர்களின் உரிமையைச் சொல்லிக் கொடுத்த கம்யூனிசத்தின் பைபிள் என்று கூறலாம்.

நாம் அனைவரும் வாசிக்க எனக்கு தெரிந்த சில புத்தங்களையும் அதை எழுதிய ஆசிரியர்களையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கடலும் கிழவனும் – கலீல் ஜீப்ரான்

மூளைக்குள் சுற்றுலா – வெ.இறையன்பு IAS

வெற்றி நிச்சயம் – சுகி.சிவம்

அர்த்தமுள்ள இந்துமதம் – கவிஞர் கண்ணதாசன்

நானும் இந்த நூற்றாண்டும் – கவிஞர் வாலி

கள்ளிக்காட்டு இதிகாசம் – கவிப்பேரரசு வைரமுத்து

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – சுவாமி சுகபோகனந்தா

வெற்றியாளர்களின் ஏழுபக்கங்கள் – ஸ்பீன் ஆர்.கோவே

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி – டேல் கார்னகி

சத்திய சோதனை – மகாத்மா காந்தி

அக்கினிச் சிறகுகள் – ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

I DO WHAT I DO – இரகுராம் ராஜன் – முன்னாள் ஆர்.பி.ஐ.கவர்னர்

அபிராமி அந்தாதி – அபிராமிப் பட்டர்

திருப்புகழ் – அருணகிரிநாதர்

போன்ற புத்தகங்களை வாசிப்போம்; மனிதர்களை நேசிப்போம்.

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
கைபேசி:  9486027221

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.