உளுந்தங்கூழ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு (உருட்டு) – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

கருப்பட்டி (தூள்) – 100 கிராம்

சுக்கு – 2 கிராம்

தேங்காய் பால் – 100 மில்லி லிட்டர்

தண்ணீர் – 500 மில்லி லிட்டர்

 

செய்முறை:-

உளுந்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக திரித்துக் கொள்ளவும். 250மில்லி லிட்டர் தண்ணீரில் திரித்து வைத்துள்ள மாவை கரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் 250 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்த உடன் மாவுக் கரைசலை சிறிது சிறிதாக தண்ணீரில் சேர்க்கவும்.

அதன்பின் சுக்கு, கருப்பட்டி ஆகியவற்றை சேர்க்கவும். மாவு வெந்ததும் தேங்காய் பாலை ஊற்றி இறக்கவும். சூடான உளுந்தங்கூழ் தயார்.