உள்பரிமாணங்கள் என்னும் நூல் சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘அந்தர் ஆயாமி‘ என்பது மூல நூலின் பெயர். இந்த கொங்கணிச் சிறுகதை நூல் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
இதன் ஆசிரியர் கோகுல்தாஸ் பிரபு, ஒரு சிறந்த கொங்கணி மொழி எழுத்தாளர். கோபிநாத் ஹெக்டே இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை வெளியிட்டுள்ளது.
உள்பரிமாணங்கள் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர், இக்கட்டான நிலைகளில் மக்களின் எண்ணங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
இந்த நிலை, தனிப்பட்ட முறையிலும், சமூகத்தைப் பாதிக்கும் முறையிலும், பல்வேறு கருப்பொருளினால் படைக்கப்பட்ட விதம், அதிக அக்கறையுடனும் கற்பனைத் திறனுடனும் முன் நிறுத்திக் காட்டப்பட்டுள்ளது.
பலவிதமான மனிதர்களின் இயற்கையான உள்பரிமாணங்களின் பார்வையாகப் படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், புதுமையான, அந்தரங்கமான கதைகளைப் படைக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். இது கொங்கணி மொழியில் தனித்துவமாகக் கருதப்படுகிறது.
கோகுல்தாஸ் பிரபு ஒரு சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதை எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் விமர்சகர். இரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, ஒரு நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார்.
‘அந்தர் ஆயாமி’ என்ற இந்த கொங்கணிச் சிறுகதை நூலுக்காக 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’ என்னும் மலையாள நாவலை கொங்கணியில் மொழியெர்த்தமைக்காக 2002-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புப் பரிசும் பெற்றவர்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராட்டி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த கோபிநாத் ஹெக்டே வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். பல கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதியும், சிறுகதைகளை மொழிபெயர்த்தும் வருகிறார்.
கொங்கணி மற்றும் தமிழ் மொழிகளில் இதிகாச, புராண உபன்யாசங்களை நடத்தி வருகிறார்.
பன்னாட்டுத் தரப்புத்தக எண் ISBN: 9789355482914
விலை: ரூ.240
நூல் அறிமுகம் பகுதி மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். தொடர்ந்து இப்பணியை செய்யலாம். வாழ்த்துக்கள்!
நூல் கிடைக்கும் இடங்கள், பதிப்பக முகவரி இவற்றையும் தந்தால் நூல் வாங்குவதற்கு பயனாக இருக்கும்.