உள்ளங்கை யளவில் உள்ளது உள்ளம்
உற்று உணர்ந்தாலோ உழைப்பின் சின்னம்
உண்மையை உரைத்திட உள்ளத்தில் கைவைப்பர்
உறுதியாய் உணர்த்திட உண்மையும் இதுவென்று
உயிரோடு உறவாட உள்ளது ஓர்சாட்சி
உயிர்தனை உறங்கினால் உனக்கேது இம்மூச்சு
உயிர்வாழும் காலத்தில் உயர்வாக நினைத்திடுவோம்
உயரங்கள் தொட்டாலும் உயர்த்தி விட்டவரை மதித்திடுவோம்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!