உழவர் நிலத்தை உழுவார்
உழுத நிலத்தில் விதைப்பார்
பழுதில் லாமல் நீரைப் பாய்ச்சிப்
பயிரை நாளும் வளர்ப்பார்
நிலத்தில் களையை எடுப்பார்
நெல்லுக்கு எருவைக் கொடுப்பார்
தலையைத் தாழ்த்தி விளைந்த செந்நெல்
தங்கக் கதிரை அறுப்பார்
களத்தில் நெல்லை அடிப்பார்
கட்டி மூட்டை எடுப்பார்
உளத்தில் மகழ்ச்சி பொங்கப் பொங்க
உண்டு வழங்கிக் களிப்பார்.
மறுமொழி இடவும்