உழைப்பால் உயர்வோம்!

உழைப்பால் உயர்வோம்

உறுதி எடுப்போம்

விழைவுத் திறனுடன்

வென்றுத் – தழைப்போம்

தொழிலைப் பெருக்கிநம்

தேசம் நலனை

அழியாது காப்போம் அறம்!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

பொருள்:

நம் உழைப்பினாலும், விருப்பத்தினாலும் நம் திறமைகளை உயர்த்த உறுதிக் கொள்வோம். ஒற்றுமையாய் வென்றிடுவோம்.

நம் தொழில் திறனை, உற்பத்தியைப் பெருக்கி நம் தேச நலனை முன் நிறுத்தி தர்மத்தையும் அழியாது காப்போம்.

இப்பாடல் நேரிசை வெண்பா செய்யுள் வகையைச் சார்ந்தது.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.