ஊக்கம் – கதை

தெருவோரம் துணிகளை தைத்து கொண்டிருப்பதை பார்த்த அபிராமி அவனிடம் சென்றாள். அவன் ஒரு ஏழை தையல்காரன் என்பது அவனது இட அமர்வு சொல்லியது.

அவனுக்கு எங்கிருந்தோ ஒரு அழைப்பு வந்தது. அவன் பேசிய பேச்சுக்கள் அபிராமியின் காதுகளில் விழுந்தன. அபிராமிக்கு அவசரமாக வெளியே போகவும் வேண்டும்.

தையல்காரன் அவசரம் புரியாமல் பேசிக்கொண்டிருந்தான். ஒருவழியாக அவன் அலைபேசியை துண்டித்த போது அபிராமி பேச ஆரம்பித்தாள்.

“மேடம்! இது மூணு நாள் வேலை. எப்படி ரெண்டு நாள்ல முடியும்? இதோட மத்த கஸ்டமர்ஸ் வேற எனக்கு துணி தெய்க்க கொடுத்திருக்காங்க!” தையல்காரன் அபிராமியிடம் தன் நிலைமை எடுத்துச் சொன்னான்.

“நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள நான் கேட்ட இருபது சட்டை தெச்சி என் வீட்டுக்கு எடுத்துட்டு வாங்க! இந்த துணிகள் எல்லாம் ஒரு அனாதை தொண்டு நிறுவனத்துக்கு குடுக்கிறதுக்குத்தான். மாட்டேன்னு சொல்லிடாதீங்க” தையல்காரனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்படத் தயாரானாள் அபிராமி.

“சரிங்க மேடம்!” மறுப்பு தெரிவிக்க முடியாமல் பதிலளித்தான் தையல்காரன்.

மறுநாள் மாலை வேளையில், அபிராமி தைத்து தர சொன்ன இருபது துணிகளை தைத்து விட்டு, அவள் வீட்டிற்கு சென்றான் தையல்காரன்

“மேடம் இந்தாங்க! நீங்க கேட்ட இருபது சட்டை.” தையல்காரன் கொண்டு வந்த பார்சலை அங்கிருந்த மேசை மீது வைத்தான்.

“ஒரு சட்டை தைக்க 300/- ரூபாய். ஆக மொத்தம் இருபது சட்டை தெச்சதுக்கு 6,000/- ரூபாய் பில்” என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அபிராமியிடம் நீட்டினான் தையல்காரன்.

அபிராமி அந்த துண்டை வாங்கிவிட்டு, தையல் கூலிக்கான பணம் ருபாய் பத்தாயிரமாக கொடுத்தாள். அவன் எண்ணிப் பார்த்துவிட்டு, மீதிப்பணம் நான்காயிரத்தை திருப்பி நீட்டினான்.

”இந்த 4000/- ரூபாய நீங்களே அட்வான்சா வெச்சிடுங்க. மறுபடியும் எனக்கு தைக்கணும். துணி வாங்கி நாளைக்கோ இல்ல நாளை மறுநாளோ கொண்டு வந்து கொடுகிறேன்”

“ரொம்ப நன்றிங்க மேடம்!” நன்றி கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு மகிழ்ச்சியுடன் சென்றான் தையல்காரன்

இதைப் பார்த்த அபிராமியின் கணவன் சங்கருக்கு மிதமான கோபம் வந்தது.

அபிராமிக்கு லேசான புன்னகை வந்தது.

”அவனைப் பார்த்தா ஏமாத்துற முகம் மாதிரியா தெரியுது. நான் பணம் அட்வான்சா குடுத்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு.

நேத்து நான் காலையில துணி தைக்க கொடுக்க போனப்போ, அவன் போன்ல ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட அழுவுறதை கேட்டேன்.

அவன் பையன் ஒரு பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிறான். அங்க பீஸ் கட்ட நாளைக்கு தான் கடைசி தேதி. நாளைக்குள்ள பீஸ் கட்டலனா அவன் பையனை கிளாஸ்ஸுகுள்ள சேர்க்கமாட்டாங்க.

அந்த ஸ்கூல்ல படிக்க விடமாட்டாங்க. நான் நேரடியா உதவி செஞ்சா அவன் ஏத்துக்காம போகலாம். அதனால தான் இந்த வகையில, மறைமுகமா அவனுக்கு அட்வான்சா பண உதவி செஞ்சேன்” அபிராமி பதிலளித்தாள்

“அபி! நீ என் பொண்டாட்டினு சொல்லிக்க பெருமைபடுறேன்” சங்கர் அவளை புகழ்ந்து தள்ளி மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்

இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அந்த தையல்காரன் தைத்து கொடுத்த இருபது சட்டைகளை எடுத்துக்கொண்டு, தொண்டு நிறுவனத்துக்கு தானமாக கொடுக்க புறப்பட்டார்கள்.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172

எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதிரேசன் ஊரிலிருக்கும் அவனது அம்மா அப்பாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள தீர்மானித்தான். படிப்பதைத் தொடரவும்…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.