காணாததை கண்டிட செய்திடுமே
கண்டதை காணாமலும் செய்திடுமே
கடிகாரத்தை மறக்க செய்திடுமே
கடற்கரையென அலையும் அடித்திடுமே
ஊரை ஒன்று சேர்த்திடுமே
உலகை சுருக்கிக் காட்டிடுமே
முகமறியா நட்பு வட்டம் தந்திடுமே
முத்தான நினைவுகள் அளித்திடுமே
உன்னை உனக்கே அடையாளம் காட்டுமே
உன்னுள் இருப்பதை வெளிக்காட்டி விடுமே
பாதையும் பயணமும் காட்டிடுமே
பாடமும் சரியாக புகட்டுமே
காவியம் கவிதை கதைகளுமே
கண்கவர் கைவினையும் அடங்குமே
பண்பாட்டினை பரவிட செய்திடுமே
பலவித பண்டங்களும் ஊட்டிடுமே
அழகான அற்புதங்கள் காட்டிடுமே
ஆழ்கடலின் ரகசியங்கள் உடைத்திடுமே
அறிவியலின் அற்புத படைப்பு ஊடகமே
அளவாய் அறிவாய் பயன்படுத்துவோமே
ஜெயஸ்ரீ பாலாஜி
சிறப்பு தோழர். வாழ்த்துகள்
அருமை. வாழ்த்துக்கள்!