ஊமை சனங்கள் என்று…

ஊமை சனங்கள் என்று உள்ளுற எண்ண வேண்டாம்
ஊர் கூடி எதிர்த்திட நிலைத்தது ஏதும் உண்டா?
தீமை தான் ஆட்சி என்றால் தீயே வந்து நியாயம் சொல்லும்
தீராத பாவம் செய்தால் எட்டு திசைகளும் அடைபடும்

பேதங்கள் சொல்பவரை பேதை என்று சொல்லிடனும்
புத்தனாக இருந்தாலும் பூமிக்குள்ளே புதைக்கனும்
மொத்தத்துல ஆடா மாடா வாழத்தான் கத்துக்கணும்
முக்காடு போட்டபடி தூக்கித் தான் போயிடனும்
என்று சொல்லி நாட்டை ஆளுகின்ற நல்லோரே கேட்டிடனும்

மேதைகளை உருவாக்கும் கல்வி இங்க தேவையில்லை
மேலும் கீழும் பார்க்கின்ற பார்வையுமே தேவையில்லை
சேதாரம் காண்கின்ற சிந்தனையும் தேவையில்லை
வேதாந்தம் மட்டும் பேசி வாழ்ந்தாலே போதுமான
ஆட்சி செய்யும் பெரியோரே…

வேதனைகள் என்று சொல்லும் வெட்டிப் பேச்சு கூடாது
வீரம் தீரம் என்று சொல்லி நின்றிடவும் கூடாது
போதையில சென்ற வாழ்வை தேடிடவும் கூடாது
புல்லும் பூண்டும் வாழ்வது போல் வாழ்ந்திட த்தான் வேண்டும்
என்று சொல்லி ஆட்சி செய்யும் பெரியோரே…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்