ஊருக்குள்ள மாடு இல்லை
மாடு மேய்க்கும் ஆளும் இல்லை
ஆனாலும் பாக்கெட்டில பாலுக்கிங்க பஞ்சமில்லை
ஆடு மாடு கோழிக்கெல்லாம் அழகழகா பேரு வச்சு
வாழ்ந்த காலம் இப்ப இல்லை
ஆடு தங்க இடமில்லை
கோழிகளும் கிளறி மேய
கொஞ்சம் கூட மண்ணும் இல்லை
சேவல் கூவ வழியுமில்லை
ஆத்தாடி ஆனாலும் முட்டைக்கு இங்க பஞ்சமில்லை
எல்லாமே ஊசியில வரும் கதை தெரியலை
நம்ம சந்ததிக்கும் ஊசி தான் காரணமா
மாறும் காலம் மெல்ல வரும் என்பதை
இங்கே யாரும் உணர்ந்ததா தெரியவில்லை
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942