எக்கணமும் அகம் நினைவேன்!

கண்ணாடிப் பந்தலிலே
கண் குளிர அமர்ந்தவளே!
கைவளையில் மிதப்பவளே
கைக் கொடுத்து காத்திடுமா!

கண்ணாடி ஒளியினிலே
கருணை எல்லாம் தெரியுதம்மா!
உன் பெருமை எல்லாம் பெருமிதமாய்,
பெரும் பொருளாய் ஆகுதம்மா!

தில்லை அம்பல நாயகியே
உன் திருமேனி ஜொலிக்குதம்மா!
தீர்த்துவிடு என் குறைகளம்மா!
திறத்தவளே என் எல்லையம்மா!

துக்கம் இனி துச்சமம்மா!
துர்க்கை நீயே அருகில் அம்மா!
அஞ்சும் மனம் இனி இல்லையம்மா!
தஞ்சம் உன்னை அடைந்து விட்டேன்.

பக்கத் துணை பகவதியே!
எக்கணமும் அகம் நினைவேன்!
போக்கடித்தல் போதுமம்மா!
போக்கிடமே உன் வாசல் அம்மா!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்