எங்கள் இராமாநுசா!

உங்களிடம் நாங்கள் சரண் புகுந்தோமே
எங்கள் இராமாநுசா
தங்களின் கருணை தொடர்ந்து வந்தாலே
சங்கடம் நீங்குமய்யா

எங்களின் வினைகள் தொடர்வதினாலே
குறைகள் முடிவதில்லை
உங்கள் பெயரை மனதில் கொள்வதினாலே
நிறைகள் குறைவதில்லை

கால்கள் இல்லாமல் வாழ்வது கடினம்
இயற்கை விதியல்லவா
இருகரம் கூப்பி மனம்தனை குவித்தால்
விலகும் இருளல்லவா

நாளும் பணி செய்து நாடு நலம் வாழ
நானும் உன்னைப் பாடுவேன்
மாந்தர் குலம் வாழ நன்மை பலசெய்த
உன்னைத் தினம் ஓதுவேன்…
உன்னைத் தினம் ஓதுவேன்…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com