தங்கப்பெண் என்று சொல்லி
தாங்கிப் பிடிப்பேனா
சிங்கப்பெண் என்று சொல்லி கொம்பு
சீவி விடுவேனா
எங்குலச்சாமி யென்று உனை
இருகையால் தொழுவேனா
தீங்கு தரும் நோயகற்றும்
தேன் மருந்து என்பேனா
சங்கத்தமிழ் பாட்டிபோல உனை
சாதிக்கச் சொல்வேனா
எங்கும் வெற்றி பெற்று வா என
ஏவி விடுவேனா
நங்கூரத்தால் கப்பல் என்றும்
நலம் பெறுதல் போல
மங்காத புகழினை இந்த
மண்ணில் பெற வேண்டும் என்பேனா
பொங்கும் அருவி போல் உனை
பாய்ந்திடச் சொல்வேனா
இன்று (மார்ச் 8 மகளிர் தினம்) உனை வாழ்த்தி
இசைப்பாடல் பாடுவேனா
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!