மனிதர்களே! மனிதர்களே!
எங்கே நீர் செல்கின்றீர்?
இனியும் அந்த உயிர் கெடுக்கும்
மதுவை நாடி செல்வீரோ?
உடல் நலிந்து உயிர்மாளும்
உணர்ந்து பார்த்து நடப்பீரே
குடலும் வெந்து மனமும் நொந்து
எல்லாம் இழந்து விடுவீரே!
மனைவி மக்கள் சுற்றம் உள்ளார்
எண்ணிப் பார்த்துக் கொள்வீரே
மனையும் உலகம் போற்றும்
உம்மை! மதுவை ஒழித்து வாழ்வீரே!
தன் இட்டம் போல ஆடிவிட்டால்
துன்பம் பின்னால் தேடி வரும்
தனி ஒருவன் ஒழுக்கம் கொண்டால்
இன்பம் எல்லாம் கூடி வரும்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com