எங்கே போகிறோம் எண்ணிப் பார்ப்போமே!
நல்லவை மறந்து தீயவைகளோடு இணைகிறோமே!
யாரை எப்படி சாய்ப்பது யோசிக்கிறோமே!
போட்டி பொறாமையில் திளைத்து இருக்கிறோமே!
மாற்றங்களைத் தேடியே நம்மை மாற்றுகிறோமே!
பழமைகளை அழித்து புதியதை நாடுகிறோமே!
மீண்டும் பழமையைத் தேடியே ஓடுகிறோமே!
எங்கு சென்று நின்றாலும்
இறுதியில் போகும் இடம்
இதயத்திற்கு முன்பே தெரிந்ததுவே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!