எங்க குல தெய்வம்

குல தெய்வ வழிபாடு

என் கூட வாழுமடா என் சாமி – அதை

இல்லையென சொல்ல வந்த நீ யாரு?

வேலி ஒன்னும் தேவையில்லை – கோவிலுக்கு

கோட்டை சுவர் தேவையில்லை

வெட்டவெளி பொட்டலு தான் குடியிருப்பு

நான் கூப்பிட்டதும் ஓடி வரும்

நான் வளர்த்த ஆடு சேவல் பலி கொடுக்க

கேட்ட வரம் கேட்டபடி அள்ளி கொடுக்கும்

தாகத்துக்கு சாராயம் கேட்டு ஆடும்

தந்து விட்டா காலத்துக்கும் காவலா வந்து நிற்கும்

மேட்டுக்குடி பாகுபாடு எஞ்சாமிக்கில்லை

மெத்தப் பணக்கார ஏழை பாகுபாடு இல்லை

சாஸ்திரம் சடங்குக எஞ்சாமிக்கில்லை

சாதி இன பேதமும் இங்க இல்லை

கோபுரமும் கொடி மரமும் இங்கயில்லை

தாய் பாசத்துல எஞ்சாமியை மிஞ்ச ஏதுமில்லை

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942