எட்டாத உயரத்தை எட்டும் வரை
எட்டாத உயரத்தில் உன்னை ஒளித்து வை
கிட்டாத புகழ் கிட்டினாலும் செருக்கு
கிட்டே வாராதபடி
மறைத்து வை
எட்டும் புகழ் எட்டும் வரை
கொட்டும் திரு கொட்டும் வரை
நாற்றிசையும் சுற்றும் வரை
நான்மறையும் கற்கும் வரை
உன்னுள் உன்னை அறியும் வரை
மண்ணுள் நீ மறையும் வரை
கண்ணுள் ஒளி காணும் வரை
எட்டாத உயரத்தில் உன்னை ஒளித்து வை
எட்டாத உயரத்தை எட்டும் வரை
எட்டாத உயரத்தில் உன்னை ஒளித்து வை
சுகன்யா முத்துசாமி
