எண்ணுகவே கண்ணனையே
எப்பொழுதும் உண்மையிலே!
அண்ணலவன் காத்திடுவான்
அண்மையிலே தங்கிடுவான்!
எண்ணிறைந்த பேருடையான்
ஏழ்பிறப்பும் தானறுப்பான்!
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
மன்னுயிராய் காஞ்சியிலே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com