கயிறாய் பிணையும் பிணைப்பாய் மணவாழ்வை நோக்குவது எதிர்பார்ப்பே…
தயிராய் க( கொ )டையும் கொடையாய் மணவாழ்வு நேர்வது எதார்த்தமே..
மதியை மூட வெண்மேகத்தை நோக்குவது எதிர்பார்ப்பே…
மதியை மூடுவது கார்மேகமாய் நேர்வது எதார்த்தமே…
பிறரை நாமாளும் பணியை நோக்குவது எதிர்பார்ப்பே…
பிறர் நம்மையாளும் பணியாய் நேர்வது எதார்த்தமே…
ஊழியத்தின் பயனாய் ஊதியத்தை சேமிக்க நோக்குவது எதிர்பார்ப்பே..
சேமிக்க நினைக்கும் தொகையில் சரிபாதி செலவாய் நேர்வது எதார்த்தமே…
விதைத்த நெல்மணியெல்லாம் விளைச்சலாய் நோக்குவது எதிர்பார்ப்பே…
கதிர் முற்றும் நிலையில் கால்பாகம் பதிராய் நேர்வது எதார்த்தமே…
விரிச்சி கேட்டு நேர்மறையாய் பலன் தரும் என நோக்குவது எதிர்பார்ப்பே…
விரிச்சி கேட்டும் நேர்மறை எதிர்மறையாய் நேர்வது எதார்த்தமே…
நல்லாட்சி அமைந்திட மையிட்ட ஆள்காட்டி விரல் நல்லாளினை காட்டும் என நோக்குவது எதிர்பார்ப்பே…
மையிட்ட ஆள்காட்டி விரல் பொய்யாளினை காட்ட நேர்வது எதார்த்தமே…
நினைப்பதெல்லாம் நடக்கவேண்டுமென நோக்குவது எதிர்பார்ப்பே…
எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் நேர்வது எதார்த்தமே…
எதிர்பார்ப்பினை எடுத்தெரிந்துவிட்டு எதார்த்தத்தோடு வாழ்வினை கடப்போம்…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353