அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
வெந்த அரிசிசோற்று மணம் வீதி மணக்கும்
நந்தா விளக்காக வீதியிலே விளக்கெரியும்
செந்தாழப்பூ வாசம் காற்றோடு மிதந்து வரும்
செந்தமிழில் தேவாரம் கோவில் மணியோடு சேர்ந்திசைக்கும்
இந்த வாழ்வு தந்துவிட்ட நிம்மதி தான் எங்கே? எங்கே?
எரிவாயு கலந்த காற்றோடு வாகன ஒலியோடு இரைச்சலிலே
இன்று ஊர் ஓடுகின்ற மனித கூட்டம் நாடுவது எதுவோ கூறு?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942