பிறந்த நொடி
என்னைச் சுமந்தவள்
என்னை வளர்த்த தந்தை
உடன் விளையாடிய நண்பன்
சொல்லித் தந்த ஆசான்
கதை படித்த புத்தகம்
நடை பயின்ற பாதைகள்
படிக்கச் செய்த வாசகங்கள்
கேட்ட குரல்கள்
பார்த்திராத முகங்கள்
அனுபவித்த சந்தோஷங்கள்
அனுபவங்கள் தந்த வலிகள்
நினைக்க வைத்த தருணங்கள்
ஏமாற்றம் தந்த எதிர்பார்ப்புகள்
ஏங்க வைத்த நேரங்கள்
அழுகை தந்த நிஜங்கள்
மறுக்க முடியாத உண்மைகள்
மறுக்க வைத்த பொய்கள்
ஆட்டு வைத்த மொழிகள்
கூறிய வார்த்தைகள்
சுடும் தருணங்கள்
மறவாத கஷ்டங்கள்
நீங்காத நிஜங்கள்
தூங்க வைத்த பாட்டி
உடன் வந்த தாத்தா
துணை நின்ற அயலான்
நம்பாத உறவுகள்
நம்ப வைத்த பொய்கள்
மறையாத நினைவுகள்
வரை ஒவ்வொருவரையும்
உயர்த்தியதும் தாழ்த்தியதும்
அவரவர் எண்ணங்களே…
இனி வரும் காலம்
நல் எண்ணங்களாக இருக்கட்டும்
ஏனெனில்
எண்ணங்கள்
எதையும் மாற்றக் கூடியவை
கு.சிவசங்கரி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!