எத்தனை உயிர்கள் பலியாகுமோ?

ஆதிக்க சதிவலையின்

முருக்குநூலில் சிக்கி

எத்தனை உயிர்கள் பலியாகுமோ?

நீட் எமனால்…

 

கேட்டுக்கு வெளியே நிறுத்தும்

நீட் தேர்வை சாமானியர்கள்

எத்தனைமுறை எழுதினாலும்

வாழ்க்கையில் தேற முடிவதில்லை…

 

அவசியமான தேர்வென்றால்

அரசியலுக்கு இல்லையேயென்று

கழுத்து நரம்புகள்

புடைத்து வீங்கினால்

சுருக்கிலிடுகிறது ஆண்டைகளின் முந்நூல்…

 

அசுர ஓநாய்கள்

வெள்ளாடுகளைக்

காவு கொள்கின்றன…

 

தொட்டில் சேலையே

தூக்குக் கயிறாய்

மாறிப் போகிறது..

 

பிள்ளைகளின் கழுத்தை அறுத்த

நீட் வலையின் பின்னலறுக்க

ஒடுங்கிய கைகள் உயர்ந்தெழும்

கொதித்தடங்கிய சாம்பலும்

உயிர்த்தெழும் …

 

நீட்டைப் பூட்டுவோம்…

பிள்ளைகளைத் திறந்திடுவோம்…

மு.சரவணக்குமார்
ஈரோடு
94880-76070
saravana.thamizh@gmail.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: