என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட காடுகரை செழிச்சுக் கிடக்க மாடு மேய்க்க போன எனக்கு பசி எடுக்க வழியுமில்லை பாட்டுக்கும் பஞ்சமில்லை வரப்போரம் வெள்ளரிக்காய் வாய்க்காலோரம் பயத்தங்காய் காட்டுக்குள்ள கடலைக்காய் கமலை மேட்டுல சீனிக்கிழங்கு மருந்து உரம் இரசாயன வாசனையில்லா வாழ்க்கையது… இத்தனையும் தொலைஞ்சிருச்சு எதிர்கால சந்ததிக்கு என்னதான் மிச்சமிருக்கு? இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942