இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
நிறம் மாறும் மலராய் நீ இருக்கின்றாய்
நிற்கின்ற இடத்தினையும் மறைக்கின்றாய்
பறந்தோடி நீ எங்கோ ஒளிகின்றாய்
பாவி என் தவிப்பினிலே மகிழ்கின்றாய்
சிறகொடிந்த எனைக் கண்டு சிரிக்கின்றாய்
சில நேரம் வருவது போல் நடிக்கின்றாய்
திறனின்றி நான் கிடக்க ரசிக்கின்றாய்
தேன் கவிப்பெண் நீ என்ன நினைக்கின்றாய்
வரமாக என் மடியில் வர வேண்டும்
விரல் வழியே புதுவடிவம் பெற வேண்டும்
சரஞ்சரமாய் மழையாய் நீ விழ வேண்டும்
சந்தமொடு உன் துணையே நாளும் வேண்டும்….
கைபேசி: 9865802942