என்னுள் கலந்துள்ளானே!

படவரா அறிதுயில் ஏறி
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே!

கிடந்த மா அரங்கின் உள்ளே நெடியனாய்
கோவலூரில் உருவுக் கொண்ட பெருமையான்
என் மனத்தினுள்ளே உறைகின்றானே!

தஞ்சமாக அடைந்தவர்க்கு
தன்னையே தந்த வள்ளல்
தங்கினான் என் மனத்திடமே
தாங்குறான் தார் மாலையானே!

மார் பிளந்த திருமார்வனவன்
இரு வேறு உருவம் கொண்டு
ஒன்று கலந்த சிங்க மால் –
என் உருவின் உள்ளே மறைந்துள்ளானே!

ஏழு அடர்த்த இராமனே
வில் வளைத்த ரூபனே
வல்லரக்கன் முடியை கொய்ந்த நாதனே
என் வாழ்வில் அனைத்தும் ஆகின்றானே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்