கருவிலே ஒரு முத்து
கண்டதங்கு இருளலகை
கருநிழலில் அது உறங்கும்
கருவறையோ அகலடையும்!
காலம் கொஞ்சம் கடக்கையிலே
முத்தங்கு விரிகையிலே
கருநீல பாற்கடல் போல்
அங்கும் இங்கும் அசைவாடும்!
ஈரைந்து மாதங்களாய்
காத்திருப்பாள் முத்தெடுக்க
முத்தொன்று காண்கையிலே
முக்தி பெற்று திரும்பிடுவாள்!
அமுதமொன்றின் முகம் கண்டு
தேற்றிடுவாள் தன் வலியை
அமுதமுது சேர்க்கையிலே
ஊட்டிடுவாள் குருதியினை!
வருடங்கள் கடக்கையிலே
வருத்தங்கள் மாற்றிடுவாள்
மழலை மொழி கேட்டதுமே
மடியனைத்து முத்தமிடுவாள்!
சான்றோனாய் வாழ்விக்க
வீழ்த்திடுவாள் தன் இன்பத்தை
வீறுகொண்டு நானெழவே
வீழாது காப்பவளே
என் அம்மா!
– கண்ணம்மா
மறுமொழி இடவும்