உள்ளச் சரங்கம்
அள்ளித் தெளித்தே
பள்ளி கொண்டதே
எள்ளி நகையாடையிலே
வானமும் கோபிக்க
கானமும் சோபிக்க
பானமும் இனிக்க
ஞானமும் பாவித்ததோ
முற்றுப் பெறாத
முற்றுப் புள்ளியாய்
சற்றும் குறையாத
விற்றும் தீராத
செம்மையான கன்னங்கள்
பொம்மையான விழிகள்
பொய்மையான புருவங்கள்
மெய்மையான வெண்ணிலவோ?
இத்தனைக்கும் என்ன
இலக்கணம்? என்றேன்
கன்னல் மொழியில்
நாணம் என்றாள்
கவிஞர் இரஜகை நிலவன்
மும்பை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!