என்ன செஞ்சு காட்டுனா,
ஓடும் இந்த கொரோனா?
முன்னம் ஒரு காலத்திலே
உடுக்கை அடித்து விரட்டினோம் …
பின்னொரு பொழுதிலே
பொங்க வச்சு காட்டினோம் …
இன்று என்ன செய்யணும்?
இந்த நோயை விரட்டணும்!
ஊருக்குள்ள வேப்பிலையை
உச்சியில கட்டணும்!
நாறும் வாறுகால் எல்லாம்
நல்ல மருந்து தெளிக்கணும்!
சீறும் அந்த கிருமிகளைச்
சீக்கிரமா விரட்டணும்!
என்ன செஞ்சு காட்டுனா,
ஓடும் இந்த கொரோனா?
பம்பரமாய் சுழன்ற பூமி
படுக்கையில கிடக்குது!
தெம்பில்லா மனித கூட்டம்
தேம்பித் தேம்பி அழுகுது!
வம்பு செய்யும் இந்த நோயை
விரட்ட வழி தெரியாம தவிக்குது!
என்ன செஞ்சு காட்டுனா,
ஓடும் இந்த கொரோனா?
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!