வன்முறைக்கு எதிராக
என்ன செய்யப் போகிறோம்?
கல்விச் சாலையும் காவு வாங்குது
நோயகற்றும் மருத்துவமனையையும்
வன்முறை சூழுது
வழக்குரைஞர் எனினும் வெட்டு விழுகுது
வீதியில் ஜனங்கள் வேடிக்கை பார்க்குது
என்னதான் நடக்குது?
எப்படி தடுப்பது?
போதையின் பிடியில் தமிழகம் தவிக்குது
பேதை ஜனங்களோ ஊமையாய் கிடக்குது
இதை எதிர்த்து பேச
எல்லா கட்சியும் தயங்குது
முதுகெலும்பு முறிந்து
வீரத்தமிழகம் செயலிழந்து தவிக்குது
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942