கந்தையானாலும் கசக்கிக்கட்டு
கூழானாலும் குளித்துக் குடி
என்று சொன்ன ஒளவையாரு
இன்று இருந்தா என்ன செய்வாரு?
பல்துலக்காம தேநீர் குடிக்கும்
பழக்கம் இங்க நிரந்தரமாச்சு
பொல்லாங்கு சொல்லும் நாளிதழோ
கைப்பேசி வழியா வரவுமாச்சு
சந்தி தோறும் அந்திக்கடைகள்
அளவில்லாமல் பெருகிப்போருச்சு
நெஞ்சில் ஈரம் இல்லாமத்தான்
நஞ்சு உணவை விற்கலாச்சு
கெட்டுப்போன எண்ணெயில
பொறுச்செடுத்த உணவுகளை
செத்துப்போன சாறுகளில் (சாஸ்)
ஊற வச்சும் கொடுக்கலாச்சு
துரித உணவை தின்றுவிட்டு
துயரமின்றி (இளவயதில்) உயிர் துறக்கும்
பயமறியா இளைஞர் கூட்டம்
போகுதே மரணப்பாதையிலே
நாகரீக போர்வையில் நாடு
நாவறுந்து மடிவது கண்டு
வேகமாக வந்த ஒளவை
வார்த்தையின்றி வாடிடுவாளோ!
என்ன சொல்லிப் பாடிடுவாளோ?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!